HI Frnds

Episode 20

Like
Like Love Haha Wow Sad Angry

Comments

comments

46 COMMENTS

 1. ஹாய் சிந்துஜா ,
  நல்ல கதை .
  சித்ரா க்கு நடக்கும் கொடுமை ……….ஐயோ தாங்க முடியலை.
  ஆனால் இப்ப இப்படி வல்கர் எண்ணம் நிறைய பேர்ட…………..இருக்கு.
  அவங்களை அடையாளம் காணுதலே கடினம் ……..பின் எங்கே வெளிபடுத்த …….
  ஆனால் கொல்லனும் அவனலாம் …………பாவி . எங்கே போய் கொண்டு
  இருக்கிறோம் னே தெரியலை

  • Hai pons ka

   கண்டிப்பா …அவங்களை அடையாளம் காண்பதே கடினம் எனும் போது வெளிப்படுத்துதல் என்பது கடினம் தான் …ஆனால் எந்த வொரு குற்றவாளியும் அவனையும் அறியாமல் ஒரு சாட்சியை விட்டு செல்கிறான் என்பார்கள் …அதுபோலத்தான் இவர்களும் …பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்…
   நன்றி க்கா 🙂

 2. HI Sindhu,
  Innikki thaan rendu updates(19&20) padichean pa chitra aa va ninaikkum pothu rombha kashtama irrukku athuleiyum latest update la andha arakkan pannra torture ninaikkum pothu cha ivan ellam manushan ninaikka thonudhu innum party la yenna yenna vachi irrukkano avalukku chitra voda inda nilamai rombha kodumai pa 🙁 chitra voda indha nilamai sakthi and Nandhu vukku theriyavarumpothu????

 3. Hi Sindhuja
  nice ud. முதல் பாதி மிகுந்த சந்தோசத்தோட படித்தால் ரெண்டாவது பாதி. இரண்டு ஆண்களை பற்றி சொல்லிருக்கீங்க.சக்தி நந்துவுக்கு அவளோட கனவை மெய்யாக்க பாடுபட கீர்த்தி சித்ராவை கொடுமைபடுவதிலேயே காலம் கழிக்கிறான். அதை படிக்கும் போதே மனம் பதைக்கிறது. கிராமத்தில் வளர்ந்து, கணவன் என்ன செய்தாலும் பொறுத்து போக வேண்டும் என்ற அவளது அம்மாவின் அறிவுரை கேட்டு சித்ரா என்ன செய்ய போகிறாள். இவ்வளவு கொடுமை பொறுப்பதற்கு அவனை ஏதாவது செய்து விடலாம்.
  சக்தி சொல்வது போல் படிப்பு அறிவை வளர்த்து கொள்ளத்தான். ஆனால் கீர்த்தி போன்ற படித்த மிருகத்தை என்ன சொல்வது.

  • ஹாய் வைதேகி

   மிகவும் நன்றிம்மா உங்க கருத்துரைக்கு 🙂 பொறுப்பதற்கு அவனை ஏதாவது செய்து விடலாம் தான் … என்ன சொல்வது ?

 4. hi sindhu akka yen chitra vukku ippadi ellam antha psyco kodumai pannanum avan palagura matha ponnungakitta ithai vachukka vendiya thaana i dont like him avan mattum en kaila kidaicha kaima thaan appuram nandhu – sakthi love was so remarkable i like it akka

 5. ஹாய் சிந்து
  என்ன சொல்வது என்றே தெரியவில்லை.மனம் கனக்கிறது.மங்கையராக பிறக்க மாதவம் செய்திட வேண்டும் என்பதெல்லாம் வெறும் ஏட்டு சுரைக்காய் தான் போல.எத்தனை வகையான துன்பங்கள்.
  //குடிப்பதற்கு முன் மிருகம் என்றால் குடித்த பின் அரக்கனாகி விடுவானே// ஈட்டி வரிகள். சித்ரா மிகவும் பரிதாபத்துக்குரிய கதாபாத்திரம்.ஆனால் அவள் எதிர்த்து நிற்க வேண்டும்.அவளது சூழ்நிலை புரிகிறது அவன் மிரட்டாமல் அவளும் இப்படி பயந்து போக மாட்டாளே ஆனாலும் அவள் நரசிம்ம அவதாரம் எடுத்து அந்த அரக்கனை கிழிக்கும் வேளையை எதிர்பார்க்கிறது மனம்.அவ்வளவு கொதிப்பு.
  பொறுத்தது போதும் பொங்கி எழு
  முதல் பாதி செம ஜில்லு .இருவருக்கிடையே செம கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கு சிந்து. புன்னகை சூழ்ந்த முகத்தோடு படித்தேன். சக்தி கலக்குறடா !
  //படிக்கறது அறிவை வளர்த்துக்க தான் படிப்புக்கு தகுந்த வேலை தான் பார்ப்பேன்னு சொல்றது சரி கிடையாது/// இந்த வரிகள் சூப்பர்.
  உங்களிடம் மிகவும் பிடித்தது இது போன்ற க்ளிஷே வசனங்கள் சிந்து. கதை ஒரு போக்கில் நகர்ந்து கொண்டு போக கதாபாத்திரங்களை கொண்டு நறுக்கென்று நீங்கள் சொல்லும் வார்த்தைகள்.அடடா என்று புருவத்தை உயர்த்துகின்றன !
  கனமில்லாத கதை என்று சொல்லிவிட்டு இவ்வளவு கனமான கதையை எடுத்து இருக்கீங்க.வாழ்த்துக்கள் ஆனா அடுத்த கதை வெறும் காதல் கதையா மட்டும் குடுங்க சிந்து.உங்களுக்கு ரொமான்ஸ் அழகா வருது

  • ஹாய் கோமதி

   மிகவும் நன்றி கோமதி …ரொம்ப அழகான கருத்து
   கிளிஷே //// ங்கே 🙁 ///
   காதல் கதையாவா …. ஹாஆஆஆ அப்போ இது என்னப்பா ?????? ரொமான்ஸ் நல்லா வருதா? ஹஹா மீ ப்ளஷ் 🙂 நன்றி கோமதி 🙂

 6. OMG 🙁 🙁 🙁
  oru arivippu kodukkarathu illaiyaaaaa???
  idhayam palaginamanavanga….ilagiya manathu ullavanga…intha episode-la first mattum padichaa pothumnu!!!!! AAVVVVEEEEEEEE ivvalo sollanumaa…Chitra padara paattai pathi….Avan ARAKKAN. FULL STOP.
  Athukku mela avanai pathi pesavo…avan kooda vaazhnthu saathikkavo enna irukku Chitravukku??Yaarachum yethachum award kodukka porangala enna?? Eveidence ellam collect panni ivan ippadithaan-nu police la solli….maatti vidamaa…Achoooo paavam….

  Inime….engalukku mattum…intha koottai thandi neenga padikkathinganu oru line potrunga Sindhu.

  • டியர் சரளா அன்ட் அரசி
   அந்த அறிவிப்பை போடணும்ன்னு முடிவு பண்ணி தான் வெச்சுருந்தேன்…பட் எதையும் தாங்கும் இதயம் கொண்ட உங்க ரெண்டு பேரோட இதயத்தை கணக்கு பண்ணி வேண்டாம்ன்னு விட்டுட்டேன் … JK ….அதுக்கு தான் பா நான் அந்த கோடு போடறதே 😉 ஹஹா நன்றி sizzys 🙂

 7. Hi
  Romba kanamaana update. Padikkum podhe komatudhu, ithai unmaiyil anubavithavarai ninaithal , kangalil rathame varudhu, nijatillum sari kathillum avannukku sariyana thandanai vendum.
  First half was asusual rocking, waiting to know about chitras decision . Kanchanadevi

 8. ஹாய் சிந்துஜா

  ud ரொம்ப நல்லா இருக்கு…
  சக்தியும், நந்துவும் மனதளவில் நெருக்கமா ஆகிட்டாங்க… அந்த நெருக்கத்தில் காதல் இருக்குன்னு எப்போ உணர போறாங்க…!!

  அய்யோ… சித்ராவுக்கு ஏன் இவ்வளவு கொடுமை…? இது எங்கே போய் முடிய போகுதோ..!! கீர்த்திவாசனுக்கு என்ன தண்டனை…!!

 9. hi sindhu..

  chithra ku nadakra kodumai manasuku romba baarama irukku..
  sari aana psycho va irukkan.

  nandhini ku chithra oda indha nilamai therinja , thudichu poiruva..

 10. சித்ராவின் வாழ்க்கையை பாலைவனமாக்கி விட்டார்களே பாவிகள் …. சித்ராவின் கணவன் அவளை துன்புறுத்த அவளின் பெற்றோரும் ஒரு காரணமகி விட்டனேரே … இவள் படிதாண்டி சட்டத்தை நாடி சென்றாள் ? இவளின் பெண்மையை அசிங்கப்படுத்துவார்கள்,சித்ராவின் கணவண் என்ற போர்வையில் இருக்கும் மிருகம் முதல்இரவையே படமாக எடுத்து வைத்து இருக்கிறவன் அடுத்த இரவுகளை எடுக்காமல் இருப்பானா? அவ்வாறு எடுக்கபட்ட படத்தில் அவனை மட்டும் வெட்டி விட்டு மற்றொருவரின் படத்தை இணைத்து இவளின் கற்பை களக்கப்படுத்தும் அள்விற்கு கணினி அறிந்தவன் என்வே அதை செய்வேன் என்று மிரட்டி இருப்பான் அது தான் அந்த படிக்கதா பேதையும் பயந்து பேசமல் இருக்கிறாள் … சித்ரா தன் வீட்டில் தன் தாயிடம் சொன்னது மேலோட்டமாக இவள் அந்த படபிடிப்பை பற்றி சொல்லியிருந்தால் விளைவுகள் நிச்சியமாக சரியாக இருந்திருக்காது.

  சக்தி அழகாக சொல்கிறானே “படிப்பு என்பது அறிவை வளர்த்து கொள்வதற்கு ” என்று ,சக்தியின் படிப்பு அவனை சான்றோன் ஆக்கியது,சித்ராவின் கணவனின் படிப்பு அவனை காமுகபைத்தியகாரனாக மாற்றியது…. ஒரு கத்தி மருத்துவரின் கையில் இருந்தால் அது உயிர்காக்க பயன்படும் அதுவே ஒரு ரவுடியின் கையில் இருந்தால் பல கொலைகள் செய்யும் பொருளாகும் … என்ன செய்ய தற்பொழுது வள்ர்ந்துள்ள அறிவியலை ஆக்கத்திற்கு பயன்படுத்தமால் அடுத்தவர்களை துன்புறுத்தி அழிக்க பயன்படுத்துகிறார்களே …. இதற்கு தான் அன்று மகாகவி பாடினானோ?
  “நெஞ்சு பொறுக்கதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் “

  • மிக அழகான கருத்துரை ..ரசித்து படித்தேன் சகோ … ஆனால் அடுத்த எபிசோடில் வருவதை எல்லாம் முன் கூட்டியே யூகித்து விட்டீர்கள் …ஹஹா மிகவும் நன்றி ப்பா 🙂

 11. Priya First halfla nalla romanceai koduthuvittu 2nd half update ore heavy update.. Keerthivasan pola attkal innum irrukanga enpathu romba varuntha thakka vishayam.. Chitravukku Sakthi than help seiyaporana?

 12. sindhu,
  சித்ரா-வின் கதை கொஞ்சம் தான் படிக்க முடிந்தது…,மீதி?????????சுத்தமா படிக்க கூடிய மனப்பான்மை எனக்கு இல்ல..,இந்த மாதிரி extreme விரிவான எழுத்து நடை தேவையான்னு தோணுது…ஆனால் நீங்க இது உண்மை சம்பவம் என்று சொல்லிருந்தீர்கள்…,இந்த மாதிரி அரக்கர்களிடம் இன்னும் எதற்காக இந்த சித்ரவதை அனுபவிக்கணும்..,ஒன்னு எந்தவித பயமும் இல்லாமல் அவனுக்கு சாப்பாட்டுல விஷத்த வச்சி கொல்லனும்..,இல்லை அதுக்கு தைரியம் இல்லனா விட்ல சொல்லி புரியவச்சி விவாகரத்து செய்யணும்…,இல்ல அவங்க புரிஞ்சிக்கலனா குறைந்த பட்சம், யார் எதை சொன்னாலும்,என்னால அங்க இருக்க முடியாதுன்னு சொல்லி தனியவாவது வந்து வாழனும்..,(எதுக்கும் இல்லாம இந்த நரக வழக்கை யாருக்காக எதுக்காக வாழனும்????அதுவும் பாவம் அவ்வளவு நல்லவனை விரும்பிட்டு????ரொம்பவே நரகம்…),இது எதற்குமே வழி இல்லனா எனக்கு தெரிந்து அவள் எடுத்த தற்கொலை முடிவு ரொம்ப சரியானது ஆனால் கண்டிப்பா சாகரத்துக்கு முன்னாடி அவன கொல்லாம சாகக்கூடாது……ஏன்னா அவன் மறுபடி ஒரு கல்யாணம் பண்ணி இன்னும் ஒரு சித்ரா உருவாக கூடாது….எது எப்படி இருந்தாலும் pls கதையிலாவது ரொம்ப கஷ்ட்டத்தை குடுக்காதிங்க தாங்க முடியில pls…

  • ஹாய் சங்கீ

   விரிவான நடை தேவையா என்று கேட்டு இருக்கிறீர்கள் …ஆனால் எங்கேயும் நான் விரிவாக கூரவில்லையே …சொல்லியும் சொல்லாமலும் வெளிப்படையாக எந்த வார்த்தையும் போடாமலும் தான் எழுதியுள்ளேன் மா …இதை விட குறைவாக கூறி இந்த வகையான டார்ச்சரை எப்படி விளக்குவது ? நீங்க கேட்கற கேள்வி எல்லாம் சரிதான் …கண்டிப்பாக அடுத்தடுத்த அத்தியாயங்களில் இதே கேள்விகளை நானும் முன் வைக்கத்தான் போகிறேன் …மிகவும் நன்றிப்பா உங்களது கருத்துக்களுக்கு 🙂

   • நீங்க சொன்னது ஒருவகையில் சரிதான்…,ஆனா அதில் நீங்க குறிபிட்டுள்ள சித்ரவதை,இது வரை கேள்வி பட்ட கொடுமைகளுக்கு எல்லாம் கிழ்த்தரமானது…ரொம்ப பேர் கேள்வி படாதது..,அதனால் தான் அந்த விரிவான என்று குறிப்பிட்டேன்….

    • நிறைய பேர் கேள்விப்படவில்லைஎன்றாலும் நடந்ததை நடப்பதை மட்டுமே எழுதி இருக்கிறேன் சங்கீ …ஆனால் இதை விட குறைவாக எழுதினால் அவனது அந்த கீழ்தரத்தை எப்படி உணர்த்துவது? வேறு வகையான கொடுமை இல்லையே இது … எப்படி குறைத்து எழுதினாலும் இதற்கு குறைவாக எழுத முடியாதே பா … ஆனாலும் உங்களது கருத்தை என் கருத்தில் வைத்து கொள்கிறேன் 🙂 நன்றி ப்பா

 13. சித்ரா ஏன் போலீஸ் இடம் செல்லவில்லை??
  அவள் படித்தவள் தானே???
  பெண் என்றால் தைரியமா இருக்க வேணாமா???
  கீர்த்தியின் குடும்பம் பற்றி சொல்லவில்லை..
  அவனின் பெற்றோர் இடம் தகுந்த உதவி கேட்கலாமே…
  மனித உரிமை கழகத்திடம் செல்லலாமே…
  விவாகரத்து பெற்று விடுதலை வாங்கி போகலாம்..
  இவனை போன்ற அரக்கனிடம் வாழ்வதற்கு!!!!!!!!!!!

  ஏதோ கருவி என்று நீங்க சொன்னது கதை நடந்த காலத்திலேயே வந்ததா?அதை தடுக்கும் சட்டங்கள் உருவாக வில்லையா???அறிவியல் இப்படிப்பட்ட கொடுமைகளுக்கும் துணை புரிகிறதே???என்ன ஒரு வேதனை???

  கீர்த்தி போன்றோர் கையில் கிடைத்தா ஒரே வீச்சு!!!!!

  போதும் சித்ரா பட்டது…துணித்து எழு!!!!!!!!!உன் தைரியத்தை வெளிக்கொண்டு துணிந்து போராடு!!!!!!!!!!!

  முதற்பகுதி நல் ரசிப்பு!!!!!!!!!
  பிற்பகுதி பெருங்கடுப்பு!!!!!!!!!!!

  • ஹாய் உமா

   முதலில் அவள் படிப்பை முடித்திறாதவள் …அவளுடைய அக்காவுக்கு கொடுமை நடந்த போதும் எதிர்த்து கேட்க தெரியாமல் வளர்க்கப்பட்ட பெண் உமா …சட்டென்று அவளால் எப்படி எதிர்க்க முடியும் …ஆனால் புழுவும் குளவியாகும் நாள் வருமல்லவா …

   பெற்றோரே சரியில்லையே பா …அவர்களிடம் தான் பேசினாளே …ஆனால் சகித்து போ என்பதை தவிர வேறு பதில் கிடைக்கவில்லையே …

   கருவி அது எப்போதிருந்தோ இருப்பதுதான் ..அது actual *** toy என்பார்கள் …இதற்காக செய்யப்பட்டது அல்ல …ஆனால் அரக்கர்கள் உபயோகப்படுத்தி கொள்கிறார்கள் …என்ன செய்வது?

   மிகவும் நன்றி உமா …உங்களது கருத்துக்களுக்கு 🙂

 14. hi sindhu,

  updatetin second half padikka padikka nenju patharuthupa. ithukkana kadumaiyana
  punishment antha keerthivasanukku kidaikkanum storylayum and nijathilayum…….

  • கண்டிப்பா செல்வி …எனக்கு இருக்க கோபத்தையெல்லாம் என்னோட எழுத்துல காட்டத்தான் போறேன்… தேங்க்ஸ் பா

 15. ஹாய் பிரியா…முடியலப்பா என்னால் இதை படிக்க …….இவளோ விலாவாரியா எழுதணுமா ????????????//

  • ஹாய் ரமாக்கா
   விலாவரியான்னா …இதை விட குறைவா எழுதவே முடியாதே க்கா …டார்ச்சர் பண்றவங்க எப்படி வேணும்னாலும் செய்யலாம் …அடிக்கறது கூட அப்படித்தான் ஆனா இங்க நடந்தது இந்த மாதிரியான டார்ச்சர் தானே… அதையும் கூட வார்த்தைகளை தேடிப்பிடித்து கவனமாகத்தான் போட்டேன் …எதையுமே வெளிப்படையா சொல்லவும் இல்லை …இன்னும் விலாவரியா எழுதுனா கண்டிப்பா உங்க பிபி எகிறுடும் 😛 ஹஹா தேங்க்ஸ் கா

Leave a Reply