மோகனங்கள் பேசுதடி!03
மோகனங்கள் பேசுதடி!03
மோகனம் 03
ரிசப்ஷனில் அமர்ந்திருந்த அருவிக்கு, ஏனோ ஒரு வித பதற்றமாகவே இருந்தது.
தந்தை வேறு வேலையோடு தான் வீடு திரும்ப வேண்டும் என்று கூறியிருக்க, கிடைக்குமா கிடைக்காதா என்ற கேள்வியே அவள் மூளையில் ஓடிக்கொண்டிருந்தது.
இதிலும் உள்ள சென்று வந்த மற்ற கேண்டிடேடின் முகம் யாவும் பொலிவிழந்து காணப்பட, அதுவே அவளுக்கு இருந்த சிறிதளவு நம்பிக்கையையும் புதைக்க வைத்தது.
பயத்தை கட்டுப்படுத்தவெனத் தான் கொண்டு வந்திருந்த தண்ணீரை எடுத்துக் குடிக்க போகையில், ஜீவா வெளியே வர அருவி எழுந்து நின்றாள்.
அருவியை நோக்கி வந்த ஜீவா,” சாரி மேடம் சாருக்கு அர்ஜென்ட் மீட்டிங் ஒன்னு வந்துருச்சு. சோ நீங்கப் போகலாம்” என்று சொன்னவுடன் அருவிக்கு ஏனோ கண்ணீர் குளம் கட்டியது.
“சார் இந்த வேலை கிடைக்கும்னு நம்பி வந்தேன். இப்படி பண்றீங்களே”
“இது எதிர்ப்பாராம வந்தது மேடம். எங்களால ஒன்னும் பண்ண முடியல. உங்களோட ப்ரோஃபைல் வேணா கொடுத்திட்டு போங்க. நெக்ஸ்ட் இன்டர்வூய்க்கு கால் பண்றோம்”ஜீவா சொல்ல,
“என்ன சார் இப்படி பண்றீங்க?”
“சாரி பார் தி ட்ரபிள் மேடம்.நாங்க கண்டிப்பா கால் பேக் பண்றோம்” சொல்லி உள்ளே சென்றவன் மஞ்சுளாவிடம் பேசினான்.
கோபமாக வெளியே வந்த அருண், தன் கோபத்தை கட்டுப்படுத்தவென அவனின் இந்து பழக்கிவிட்ட பேருந்து பயணத்தைத் தேர்ந்தெடுத்தான்.
பேருந்து நிலையம் வந்தவன் பேருந்திற்காகக் காத்திருக்க, அப்போது அங்கே அருவியும் சோக முகத்தோடு கண் கலங்க வந்தாள்.
அவளை பார்த்த அருணிற்கு ஏனோ அந்த கலங்கிய முகம் அவனின் இந்துவை அவள் அன்றையபொழுது இருந்த நிலையை ஞாபகப்படுத்த, தலையைச் சிலுப்பி முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
எவ்வளவு தான் மறக்க வேண்டும் என்று நினைத்தாலும், அது மறக்கக்கூடிய நிகழ்வா? அது தானே அவளை அவன் இறுதியாகப் பார்த்தது. அடுத்து அவன் கண்டது என்னவோ அவளின் உயிரற்ற உடலைத் தானே.
இப்போது நினைத்தாலும் அவனால் அதனைக் கடந்து வரமுடியவில்லை. இதற்கெல்லாம் காரணம் தான் தானே என்று நினைக்கியிலே உடலெங்கும் அந்தக் குளிரிலும் எரிந்தது. அந்த நேரம் பார்த்து இருவர் அருவிக்கும் அருணிற்கும் இருந்த இடைவெளியில் வந்து நின்றனர்.
அவர்களைக் கண்ட அருண் சற்று தள்ளி நின்றுகொண்டான்.
அதில் ஒரு பெண்மணியின் முகம் கடுகடுக்க, மற்றொரு பெண்ணின் முகத்திலோ சோகம் அப்பிக்கிடந்தது.
“ஏன் தான் உன்ன போய் என் மகனுக்குக் கட்டிவச்சேனோ தெர்ல, அவன் வாழ்க்கை இப்டி இருக்கு. உங்களுக்கு கல்யாணமாகி ரெண்டு வருஷமாச்சு இன்னும் உனக்கு ஒரு புழுப் பூச்சி வயித்தில அண்டல. பேசாம அவனுக்கு என் தம்பி பொண்ணை கட்டிவைக்க வேண்டியது தான்”அவளின் இதயத்தில் வார்த்தை எனும் ஈட்டியை வைத்துக் குத்தினார்.
“அத்த”கண் கலங்கவிட,
“என்ன அத்தை?உன்னால இந்தக் குடும்பத்துக்கு ஒரு வாரிசு குடுக்க முடியாதுன்னுபோது நீ எங்களுக்கு எதுக்கு?”
இவர்களின் பேச்சினைக்கேட்டு கட்டுப்படுத்த முயன்ற கோபம் இப்போது அருணிற்கு உச்சியில் வந்து நின்றது.
அவர்களை நோக்கி அடியெடுத்து வைத்தவன், அடுத்து கேட்டதில் அப்படியே நின்று கவனிக்க தொடங்கினான்.
“என்ன பேசுறீங்க நீங்க, பொண்ணுன்னா என்ன குழந்தை பெத்து போடற மெஷினா உங்களுக்கு வேணும்ன்றபோது பெத்து போட. முதல நீங்க யாரு அவங்களோட ப்ரைவசில தலையிட?”அருவி கோபமாய் கேட்க,
“நீ யாரு முதல? எங்க குடும்ப விஷயத்துல தலையிட”
“எது உங்க குடும்ப விஷயமா, இது இந்தப் பொண்ணோட தனிப்பட்ட விஷயம். அத எடுத்து மட்டம் தட்டுவீங்களா?இதுவே உங்க பொண்ணுக்கு நடந்தா இப்படி தான் மனசு நோகுற மாதிரி பேசுவீங்களா? யாரோ பெத்த பொண்ணு, அப்படின்ற எண்ணம் தானே உங்கள இப்படி பேச வைக்குது. ச்ச, என்ன மாதிரியான பொம்பள நீங்க, அவங்களுக்கு ஆதரவா இல்லனாலும் பரவலா நோகடிக்காதிங்க.”
“ஏய்!” அந்தப் பெண்மணி கையோங்கி அருவியை அடிக்கப் போக, ஓங்கிய கையை அப்டியே பிடித்தான் அருண்.
அருவியைத் தள்ளி நிறுத்திய அருண்,” யாருன்னு தெரியாத பொண்ண கை நீற்ற. என்ன போலீச கூப்பிடவா? ஒரு கால் பண்ணி நீங்க இந்தப் பொண்ண வம்பிழுக்குறீங்கன்னு சொன்னா போதும், அடுத்த நிமிஷம் வந்து நிப்பாங்க. என்ன கால் பண்ணட்டுமா?”புருவம் உயர்த்தி கேட்க,
பயந்து போன அந்தப் பெண்மணி அருணிடமிருந்து கையை உருவிக்கொண்டு, மருமகளை இழுத்து சென்றார்.
“தேங்க்ஸ்” ஒரு புன்னகையோடு அருவி கூற,
“பரவால்ல.நான் ஒன்னு கேக்கலாமா?”
“ம்ம். கேளுங்க”
“இவளோ தைரியமா பேசுன நீங்க, பஸ் ஸ்டாப் வரும்போது கலங்கின மாதிரி இருந்தது”
“இங்க ஏவி ஸ்கூலுக்கு இன்டெர்வியூக்கு வந்தேன். பட் வேலை கிடைக்கல”சோகமாகச் சொல்ல,
“எங்க உங்க ரெஸ்யும் கொடுங்க பாப்போம்” என்று வாங்கி அவளின் படிப்பினை பார்த்தவன்,”சரி வாங்க உங்களுக்கு ஆஃபர் லெட்டர் கொடுக்கச் சொல்றேன்.”அருண் சொல்லவும் தேனருவி கேள்வியாய் நோக்கினாள்.
“நான் தான் அந்த ஸ்கூல் சேர்மேன்”என்று சொல்லி அவளை அழைத்து வந்தவன், ஜீவாவிடம் கூறி அவளின் பெயரையும் கேட்டுச் சென்றான்.
வேலை கிடைத்து விட்ட நிம்மதியில், வீட்டிற்க்கு சிறிது தின்பண்டம் வாங்கி சென்றாள் அருவி.
வீட்டிற்குள் நுழைந்ததுமே,”என்ன வேலைய வாங்கிட்டு தான வந்த?”மூர்த்தி கேட்க,
“கிடைச்சுடுச்சி பா.நாளைக்கு வந்து ஜாயின் பண்ண சொல்லிருக்காங்க”
“எவ்வளவு சம்பளம்?”
“பதினஞ்சாயிரம் சொல்லி இருகாங்க பா”சொல்லி அன்னையை அழைத்துத் தின்பண்டத்தைக் கொடுக்க,
“இத்துணுண்டு சம்பளத்துக்கு இது எல்லாம் வாங்கணுமா என்ன. இதுங்களுக்கு இப்போ இது தான் குறைச்சல் பாரு” சொல்லிச் சந்திரா கையில் இருந்த தின்பண்டத்தைப் பிடுங்கி சென்றார்.
“இவரு ஏன் தான் இப்படி இருக்காரோ, எப்படா நேரம் கிடைக்கும் நம்மளை நோகடிக்கலாம்னு காத்திட்டு இருப்பாரு போல” சந்திரா பொறுமி தள்ளினார்.
“விடு மா. அவர மாத்த முடியாது” சொல்லி மகளைக் காண சென்றுவிட்டாள்.
இரவு அன்னையோடு சேர்ந்து வீட்டு வேலையை முடித்து விட்டுத் தனது அறைக்கு வந்த அருவிக்கு, அப்போது தான் மூச்சு விடவே முடிந்தது.
வீட்டிற்கு வந்த நேரம் தொட்டு தந்தையால் எதாவது ஒரு வேலையைச் செய்தபடியே இருந்தாள்.
வேலை செய்த சோர்வு நீங்குவதற்காக ஹீட்டர் போட்டுக் குளித்து விட்டு ஒரு நைட்டியை அணிந்தவள், கண்ணாடி முன்பு நின்று தன்னை பார்த்தாள்.
இந்த நான்கு வருடத்தில் அவள் வாழ்க்கையே திசை திரும்பிப் போய்விட்டது.கணவனால் அத்தனை கோட்பாடுகள் அவளுக்குப் போடப்பட்டது. இது அணியக் கூடாது, அது அணியக் கூடாது, இது தான் போடணும், இது தான் சாப்பிடணும் என்று பல கட்டுப்பாடுகள். இந்த நான்கு வருட காலத்தில் அவள் கேட்டு ஒன்று கிடைத்தது என்றால் அது படிப்பு மட்டுமே.
அத்தனை பிரச்சனைகளுக்கும் இடையில் அவளுக்குக் கிடைத்த பொக்கிஷம், அவள் குழந்தை பூவினி தான்.
குழந்தையின் ஒற்றை புன்னகை போதும், அவளின் அத்தனை கவலைகளையும் பின்தள்ள. அதுவே அவளைத் துயரத்திலிருந்து மீட்டெடுத்து கடந்து செல்ல வைக்கிறது.
“மம்மி!”குழந்தை அவள் முந்தானையை பிடித்து இழுக்க,
“தூங்கலயா அம்மு?”
“தூக்கம் வரல மம்மி” இதழ் பிதுக்கிச் சொல்ல,
பூவினியை தூக்கிக்கொண்ட அருவி, “ஏன் தூக்கம் வரல அம்மு. மதி நீ தூங்கிட்டதா சொன்னாளே.”
“பேபிக்கு தூக்கம் வரல மம்மி. நாம நம்ம வீட்டுக்கே போலாம்”குழந்தை சொல்லி அன்னையை பார்க்க, பதில் சொல்ல முடியாத நிலையில், முள்ளில் மேல் நிற்பது போல் நின்றாள்.
“மம்மி, நாம எப்போ நம்ம வீட்டுக்குப் போகப் போறோம்?”
“இனி இது தான் அம்மு நம்ம வீடு. நாம எங்கேயும் போகப் போறது இல்ல. இனிமேல் இங்க தான் இருக்க போறோம்”குழந்தைக்குப் புரியும் வகையில் சொல்ல,
“அப்போ டேடி?”
“அவரு வெளியூருக்கு போயிருக்காரு அம்மு. அவரால இனி நம்ம கூட இருக்க முடியாது டா. நம்ம இனி பாட்டி தாத்தா விழி சித்தி மதி சித்தி கூடத் தான் இருக்க போறோம். அவங்க கிட்ட எல்லாம் இப்படி கேட்கக் கூடாது அம்மு புரியுதா “
“இங்க இருக்கிற தாத்தா உங்களைத் திட்டிட்டே இருக்காங்க மம்மி. எனக்கு அவரைப் பிடிக்கல”
“அம்மு! அப்படியெல்லாம் பேசக் கூடாது. தாத்தா கேட்டா வருதப்படுவாருல”
“ம்ம்ம்” சொல்லி முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டாள்.
“சரி, வாங்க தூங்க போகலாம்” என்று குழந்தையைத் தூக்கி படுக்கையில் படுக்க வைத்தவள், அவளைத் தட்டிக்கொடுத்தபடி தூங்க வைத்தாள்.
*****
லண்டன்
ஊரே அடங்கியிருந்த நிலையில் இரவு பனிரெண்டு மணி போல் இளைய தலைமுறையினர் தன் கவலைகள் தீர, ஆடிப் பாடி கொண்டாடிக்கொண்டு இருந்தனர்.
அந்த நேரத்திலும் அங்கு ஒருவன் இனொருவனிடம் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தான்.
“நீங்க என்ன பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாது. இன்னும் ஒரு மாசத்துல எனக்கு முடிச்சு தரணும்.”
“அது எப்டி முடியும் விஷ்வா.இன்னும் நிறைய ஒர்க்ஸ் பெண்டிங் இருக்கு.”
“அது உங்க பிரச்சனை. நான் குடுத்த தேதிய விட நிறைய டைம் குடுத்தாச்சி. இனிமேலும் டேஸ் எஸ்ட்டெண் பண்ண முடியாது. சோ சீக்கிரமாவே பில்டிங்க ஹேண்டோவர் பண்ண பாருங்க.”
“சரி” என்று அவன் கிளம்பிவிட, விஷ்வா பணியாளிடம் கேட்டு விஸ்கி வாங்கி குடிக்க தொடங்கினான்.
அந்த நேரம் பார்த்து அவனோடு வேலை செய்யும் நேத்ரா கையில் குவளையோடு தள்ளாடிய நிலையில் அவனை அழைத்தபடி வந்தாள்.
“விஷ்!”
“விஷ் பேபி!”
“விஷ்வாஆஆஆ”காது கிழியும் அளவுக்குப் போதையில் அவள் கத்தி அழைக்க, அவனோ கண்டுக்கொள்ளாது மொபைலை நோண்டியவாறே இருந்தான்.
“விஷ், ஏன் என்ன அவாய்ட் பண்ற?”போதையில் தள்ளாடிய படியே கேட்க,
“பிடிக்கல”ஒற்றை வரியில் முடித்தான்.
“நேத்து பிடிச்சது இன்னைக்கு பிடிக்கலையா?”என அவனை நெருங்கி வர, அவனோ எழுந்து நின்றவன்,” நான் நேத்தே தெளிவா சொல்லிட்டேன் உன்ன பிடிக்கலன்னு.ஸ்டே யூவர் லிமிட்ஸ் நேத்ரா” பொறுமையாகவே சொன்னாலும் அதில் சிங்கத்தின் கர்ஜனை இருந்தது.
“விஷ்” அவனை மேலும் நெருங்கி வந்து முத்தமிட பார்க்க, அவளைத் தள்ளிவிட்டவன் எரிக்கும் சூரியனாய் அவளை எதிர்த்து நின்றான்.
“நட்பா உன் எல்லையில இருக்கிற வரைக்கும் தான் நான் உனக்கு நண்பன். அதைத் தாண்டி வர நினைச்ச கொன்னு போட்டுப் போய்ட்டே இருப்பேன்.”
“விஷ்வா! ஐ லவ் யூ மேன்…”குலையும் குரலில் காதலை சொல்ல,
“இந்த விஷ்வப்ரசாத் ஒன்னும் பொண்ணுங்கள பார்த்து மயங்கிற ஆல் கிடையாது.அந்த ரம்பையே வந்தாலும் என் கால் தூசிக்கு சமம். இனி என் கண்ணு முன்னாடி வந்த, மீனுக்கு இரையா கடல்ல மிதப்ப ஜாக்கிரதை”மிரட்டிச் சென்றான்.
அவன் வேலை பார்க்கும் ஆஃபீசே இவளை சுற்றி அழைய, இவளோ விஷ்வாவின் பின்பு நட்பு என்ற பேரில் சுற்றினாள். அவனோ இவளை ஒரு பொருட்டாகக் கூட கருதியது கிடையாது.
நேற்று கிடைத்த நேரத்தில் தன் காதலை விஷ்வாவிடம் நேத்ரா சொல்ல, அவனோ மறுத்துவிட்டான்.
தன்னை ஒருவன் மறுப்பதா என்று ஆங்காரம் கொண்ட நேத்ரா அவனை அடையும் வேளையில் இறங்கி அனைவரது முன்பு அசிங்கப்பட்டு நிற்கிறாள்.
போகும் அவனையே பார்த்த நேத்ரா,” உன்ன அடையாம விடமாட்டேன் விஷ்வா” தனக்குள்ளே சபதமெடுத்து கொண்டாள்.
வீட்டிற்கு வந்த விஷ்வா, நேராக அவன் வீட்டிலே குடிப்பதற்காக வைத்திருந்த சிறிய பப்பிற்குள் நுழைந்தான்.
எப்போதும் குடிக்கும் மதுபானத்தை எடுத்துக் கொண்டவன், பாட்டிலோடு குடிக்க தொடங்கினான்.
அந்த நேரம் பார்த்து அவன் மொபைல் சிணுங்க,” இவனோட தொல்ல தாங்க முடியல” சலித்து கொண்டு அதனை உயிர்பித்தான்.
“என்ன டா வேணும் உனக்கு? ஒரு நாள் கூட என்னை நிம்மதியா விட மாட்டியா” எடுத்த எடுப்பிலே கத்த,
“நீங்க அப்போ குடிக்குறதை நிப்பாட்டுங்க சார். நானும் கால் பண்றதை நிப்பாட்டிறேன்”ஜீவா சொல்ல,
“என்ன டா நினைச்சுட்டு இருக்க நீ? ஒழுங்கா என்ன அண்ணான்னு சொல்லிக் கூப்பிடு.அது என்ன எரும சாரு மொருனுட்டு”
“என்ன நீங்க உங்க தங்க கம்பியா நினைச்சிருந்தா, குடிக்கிறதை நிப்பாட்டிஇருப்பீங்க இல்ல ஊருக்காவது வந்திருப்பீங்க.ஆனா அப்டி எதுவும் நீங்க செய்யலையே. இப்பவரைக்கும் அண்ணனும் தம்பியும் உங்க இஷ்டத்துக்கு தான இருக்கீங்க.”
“சில விஷயத்தை மாத்த முடியாது ஜீவா.”
“மாற்றம் ஒன்று தான் மாறாதது விஷ்வா அண்ணா. கண்டிப்பா எல்லாமே ஒரு நாள் மாறும்.அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.”
“ம்ஹ்ம்.உன் நம்பிக்கைக்கு ஒரு ஆல் தி பெஸ்ட் டா தம்பி” கூறி வைத்தான்.
இன்னும் சில தினங்களிலே இருவரது வாழ்க்கையும் மாறக் காத்திருக்கிறது. மாற்றம் எந்தவகையில் என்பது விதியின் பிடியிலே.