KM3

KM3

                              கெட்டிமேளம் 3

 

 

“நேக்கு அத்திம்பேரை ரொம்ப பிடிச்சிருக்கு” அவர்களின் கார் சென்ற உடனேயே வீட்டிற்குள் வந்த வைஷ்ணவி   குதித்தாள்.

“நோக்கு புடிச்சு என்ன ஆப்போறது? அனுவுக்கு புடிச்சா சேரி. என்ன அனு, பையன் என்ன பேசினான்?” ருக்கு பெரிம்மா அனுவிடம் ரகசியம் பேச,

“ஒண்ணுமில்ல பெரிம்மா. அவரை பிடிச்சிருக்கான்னு கேட்டார். வேற ஒன்னும் பேசல.

“என்னவோ போ. எங்க காலத்துல கல்யாணமாகி ரெண்டு வாரம் கழிச்சு தான் உங்க பெரியப்பா முகத்தையே சரியா பாத்தேன். “சலித்துக் கொண்டாள் ருக்கு.

“அப்பறம்…?!” வைஷு ஆர்வமாக

“அப்பறம் என்ன. ஏன்டா பாத்தோம்னு தோணிடுத்து!” நாராயணனைப் பார்த்து நெஞ்சில்அடித்துக் கொண்டு சொல்ல,

“உங்க பெரியம்மா வ கட்டிண்டா தான் ஆச்சுன்னு அவ அப்பா ஒரே போராட்டம். போன போகுதுன்னு ஒத்துண்டேன். இல்லன்னா …” நாராயணன் தன பக்கத்து நியாயத்தைக் கூற,

“ஐயோ போதுமே உங்க கல்யாண புராணம். கொழந்த கல்யாணத்தைப் பத்தி பேசுங்கோ” ருக்கு அத்துடன் அவள் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க,

வச்சு கேசரியை எடுத்து வந்து அனுவிற்கு ஊட்டினாள்.

அனுவும் மகிழ்ச்சியாக வாங்கி உண்ண,

பெண்ணைப் பிரிய வேண்டுமே என்ற கவலை வச்சுவிற்கு இப்போதே தொற்றிக் கொண்டது.

அதைக் கண்ட வைஷு, “லாலே லா ல லே லா லா……..”

என்று பின்னாலிருந்து பாட,

“போடி கழுத” அவள் தலையில் கொட்டினாள் வச்சு.

“ஆ!!” தலையைத் தேய்த்துக் கொண்டவள்,

“வச்சு … இந்த நாள் உன் காலெண்டர் ல குறிச்சு வெச்சுக்கோ” வீர வசனம் பேச,

“எதுக்கு டீ?” வச்சு பஜ்ஜி பிளேட்டை கையில் எடுக்கவும்,

“ம்ம் ஒண்ணுமில்ல சும்மா குறிச்சு வெச்சுக்க சொன்னேன். எனக்கு ரெண்டு பஜ்ஜி மா ப்ளீஸ்” என அந்தர் பல்டி அடித்தாள்.

“உடனே ஒரு சின்ன மண்டபம் பாக்கணும். அவா ஆத்துல எத்தனை பேர் வருவான்னு கேட்டுக்கோங்கோ. சாப்பாட்டுக்கு நம்ம கோவிந்தன் கேட்டரிங் சொல்லிடுவோம். நன்னா சுத்தமா பண்ணிகுடுப்பான்.” வச்சு அடுக்கிக் கொண்டே போனாள்.

“சரி டி வச்சு. பத்திரிகை எழுத வாத்தியாருக்கும் சொல்லிடறேன். ஆத்துக்கு பக்கத்துலயே இருக்காரோனோ.” சாரங்கபாணி தன் பங்கை சொல்ல,

“அம்மா மெனு நான் சொல்றேன்.” வைஷு சாப்பாட்டு விஷயம் என்றால் உடனே ஆஜர்.

“ம்ம்ம் சொல்லலாம் இரு டீ. அதுக்கு முன்ன நிச்சயதார்த்தத்துக்கு புடவை ஒன்னு புதுசா வாங்கணும். மாப்பிளைக்கும் பேண்ட் ஷர்ட் மோதிரம் வாங்கணுமே! அட கடவுளே இப்போவே அளவுக்கு கேட்டிருக்கலாமே!” வச்சு மறந்ததை சொல்ல,

“பரவால்ல வத்சலா. நாம எல்லாருமே அவா ஆத்தை பாக்கணுமோன்னோ. போய் பார்த்துட்டு அப்படியே அளவு வாங்கிண்டு வருவோம்.” நாராயணன் சொல்ல,

“ஆமா அதுவும் சரி தான்.” சாரங்கன் ஆமோதித்தார்.

“கட கட ன்னு எல்லாம் நடந்துடுத்தே! இந்த அம்புவும் கூட இருந்திருந்தா நன்னா இருக்கும். உங்க தங்கைக்கு போன் பண்ணேளா!?” ருக்கு அவளின் நாத்தனாரை நினைவு படுத்த,

“அவ நாளைக்கு வரேன்னு சொன்னா. அவளையும் கூட்டிண்டு போவோம்” சாரங்கன் பதில் தர,

“ஐ அப்போ நாளைக்கே போறோமா!” வைஷு குஷியானாள்.

“நீ வர வேண்டாம். நீ அனுக்கு துணையா ஆத்துலையே இரு. நாங்க பெரியவா மட்டும் போய்ட்டு வரோம்.” வச்சு ஆர்டர்.

அனைத்தும் பேசி முடிவெடுத்தனர்.

மண்டபம் முதல் தாம்பூலப் பை வரை அனைத்திற்கும் ஆளுக்கொரு வேலையாகச் செய்து ஒரே நாளில் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்தனர்.

பெண் பார்த்துவிட்டு காரில் கிளம்பியதிலிருந்து அத்தை மீது    காட்டமாகவே இருந்தான் ரகு.

“அத்தை நான் தான் நகை பணம் பத்தி எதுவும் பேசக்கூடாதுனு சொன்னேனோல்யோ அப்புறம் எதுக்கு கேட்ட” கார் சற்று தூரம் சென்ற பிறகு கேட்க,

அவனது அத்தை அலமேலு, பங்கஜத்தைப் பார்க்க,

“ஓ! நீ சொல்லி தான் அத்தை கேட்டாளா! என்னம்மா இப்படி இருக்க? நம்ம கிட்ட என்ன இல்ல? அவ கொண்டு வர போறத வெச்சு தான் வாழணுமா?

அவகிட்ட வாங்கி அவளுக்கு நான் சாப்பாடு போடறதுக்கு, அந்த பணத்தையும் நகையும் வெச்சு அவா ஆத்துலையே அவ சந்தோஷமா இருப்பாளே மா!

அவ அப்பா அம்மா குடும்பத்தை விட்டுட்டு நம்ம குடும்பத்தை பாத்துக்க என்னை நம்பி வரா, அவளுக்கு நாம தான் குடுக்கணும். எனக்கு இந்த வழக்கமே புடிக்கல. இதோட நிறுத்திக்கோங்கோ. அவா என்ன பண்ணாலும் குறை கண்டுபிடிக்காம இருங்கோ.

போறப்ப என்னத்த கொண்டு போகப் போறோம். இருக்கற கொஞ்ச கால வாழ்க்கையை பணத்தை காட்டி கெடுக்காதீங்கோ. “தலையில் கடுப்புடன் அடித்துக் கொண்டான்.

“ஏன் டா ஊர்ல நடக்காததையா நாங்க கேட்டுட்டோம். எதுக்கு இப்படி பேசற” பங்கஜம் வாயை மூடுமாறு சைகை செய்தும் அதை புறக்கணித்து அத்தை அலமு கேட்டுவிட,

“ஊர்ல இருக்கறவாள்ளாம் கிணத்துல குத்திக்கறாளாம். நீங்களும் குதிச்சுடுவேளா?”

“நான்னா இருக்கு. நான் என்னத்துக்கு குதிக்கணும்?” அலமு தோளில் முகத்தை இடித்துக் கொள்ள,

“அதே தான். ஊர்ல இருக்கறவா என்ன பண்ணா எனக்கென்ன. நானும் அவளா மாதிரி இருக்கணுமா”

“இங்க பாரு ரகு. நாங்க எதுவும் கேக்க மாட்டோம். உன்னோட விருப்பம் தான் டா முக்கியம். அத்தைய தெரியாம கேக்க சொல்லிட்டேன். மன்னிச்சுடு” பங்கஜம் மனதாரக் கூற,

சற்று சாந்தமடைந்தான் ரகு.

“அந்தச் சின்ன பொண்ணும் நன்னா இருக்கா. நன்னா பாடறா” வேணு நிலைமையை சரி படுத்த வாயைத் திறந்தார்.

“நன்னாவே பேசறா கூட. வாயாடியா இருப்பா போலிருக்கு” பங்கஜம் சேர்ந்துகொள்ள,

அவள் தன்னிடம் பேசியதை நினைப்படுத்திக் கொண்டான் ரகு.

மெல்லிய புன்னகை அவனையும் அறியாமல் அரும்பியது.

நிச்சயத்தைப் பற்றி அவர்களும் பேசிக் கொண்டு வர, அனுவிடம் தான் மனத்தால் பறந்து கொண்டிருந்தான் ரகு.

“நாம புடவை மட்டும் தான் வாங்கணும். மத்தபடி சீர் தட்டு வைக்கணும். மத்ததெல்லாம் அவா தான் பண்ணனும்” வீட்டில் நுழைந்த படியே பங்கஜம் பேசிக் கொண்டு வர,

சரியாக போன் செய்தான் அரவிந்த்.

“ஹே அர்விந்த். இப்போ தான் உன்னை நெனச்சேன்”

“டேய் பொய் சொல்லாத டா. அங்க இருக்கும் போது போன் பண்ணுடா னு சொன்னா. வீட்டுக்கு வந்து என்னை நெனைக்கறேன்னு சொல்ற. சரி விடு.  எல்லாம் ஓகே வா? எப்போ மேரேஜ்?”

“ஆல் ஓகே டா. நீ எப்போ வரியோ அப்போ தான் மேரேஜ். ஆனா இன்னும் டு வீக் ல பெட்ரோத்தால்”

“வாவ் டா. கங்கிராட்ஸ். கலக்கறே ரகு. எனக்கு ரெண்டு மாசம் லீவ் இருக்கு. அவா ஆத்துல எப்போ ஓகே வோ அப்போ மேரேஜ் வெச்சுக்க சொல்லு. நீ டேட் சொன்னதும் லீவ் போட்டுட்டு ஓடி வரேன்! “அண்ணன் ரகுவிற்காக மிகவும் மகிழ்ந்தான் அரவிந்த்.

போனை வைத்தவன், “ஊ ஹூ … மை பிரதர் இஸ் கெட்டிங் மேரீட் சூன் கெல்சி டியர்” தன்னோடு ஒரே வீட்டில் வசிக்கும் அவனது தோழியிடம் குதூகலிதான்.

“ஹே! ஆஸம். வென் ஆர் வீ கெட்டிங் மேரீட்?” அவன் தோளில் சாதாரணமாக கை போட்டுக் கொண்டு அந்த வெள்ளைக்காரி கேட்க,

“ஆள விடு மா தாயே. எனக்கு எங்க ஊர் பொன்னே போதும். திட்டினாலும் வாய்க்கு ருசியா சாப்பாடு கிடைக்கும். உன்ன கல்யாணம் பண்ணி யார் வாழ்க்கை முழுக்க விரதம் இருக்கறது. டெய்லி நீ போடற பாஸ்தாவ திங்க எனக்கு என்ன விதியா?” அவள் கைய எடுத்து விட்டவன் தமிழிலேயே சொல்ல,

“வாட்..?”

“நத்திங்.” கை எடுத்துக் கும்பிட்டு அவன் அறைக்குள் புகுந்து கொண்டான்.

“ஹா ஹா ஸ்வீட் பாய்” அவளது பாய்ப்பிரண்டை அழைத்து வர வெளியே சென்றாள்.

கெல்சி எப்போதும் இப்படி கலகலப்பாக பேசுவது வழக்கம்.

அரவிந்தோடு தான் வேலை பார்த்தாள்.

அரவிந்த்தும் அவனது நண்பனும் இவர்கள் வீட்டில் தான் தங்கி இருந்தார்கள். கெல்சியும் அவளது பாய் ப்ரெண்டும்   வீட்டை இவர்களோடு பகிர்ந்து கொண்டிருந்தனர்.

                                                               **

 

அனுவிற்கு மட்டும் ஏனோ மனம் பதைத்தது. ஒரு புறம் ரகுவை நினைத்து குளிர்ந்தாலும், அப்பா அம்மா வைஷுவை பிரிவதென்பது வேதனை தந்தது.

பெண்ணாகப் பிறந்தால் இந்த வேதனையை நிச்சயம் அடைந்தே தீர வேண்டுமே. அம்மாவின் கைமணம், அப்பாவின் பாசம், வைஷுவின் குறும்பு அனைத்திற்கும் இனி காத்திருந்து அனுபவிக்க வேண்டும்.

இந்தக் கல்யாணம் என்ற ஒன்று, ஒரு பெண்ணுக்கு துணையாக கணவனை கொடுத்தாலும், ஏன் பெற்றவர்களை அவளிடமிருந்து பிரிக்கிறது. இந்தக் கொடுமையை மிகவும் தைரியசாலிகள், திடமானவர்கள், ஆம்பளை என்று மீசையை முறுக்கிக் கொள்ளும் ஆண்களுக்கு கொடுக்க வேண்டியது தானே!

பாசத்திற்கு கட்டுப் பட்டு, பூ போன்ற மென்மையான மனம் கொண்டிருக்கும் பெண்களுக்கு ஏன் வைத்தார்கள்.

கல் நெஞ்ச காரன் எவனோ ஒருவன் தான் இப்படிப் பட்ட சட்டத்தை கொண்டுவந்திருக்கணும்.

மனதிற்குள் போட்டு எதை எதையோ யோசித்தும் திட்டிக் கொண்டும் இருந்தாள்.

இரவு விடி விளக்கின் ஒளியி ல் தூக்கம் வராமல் இதை எல்லாம் யோசித்துக் கொண்டிருக்க,

அவள் அருகில் படுத்திருந்த வைஷ்ணவி பாதி தூக்கத்தல் எழுந்து இவளை பார்த்தாள்.

“என்ன அனு, ரகுக்கு போன் பண்ணலாமான்னு யோசிக்கரியா?” வசதியாக அவள் தோள் மேல் தலை வைத்து அவளைக் கட்டி கொண்டு கேட்க,

“எனக்கு அதை பத்தியே ஞாபகம் இல்ல டீ” குரல் சுரத்தே இல்லாமல் வர,

“பின்ன என்ன அனு. எதை பத்தி யோசிச்சு இப்படி முழிஞ்சிண்டிருக்க?” திரும்பி அவளை பார்க்க,

“கல்யாணம் பண்ணி போய்ட்டா, நான் உங்களை எல்லாம் மிஸ் பண்ணனும். ஏன் டீ பொண்ணுங்கள மட்டும் மாப்பிள்ளை ஆத்துக்கு அனுப்பி வைக்கறா? மாப்பிள்ளை பொன்னாத்துக்கு வந்து இருக்க வேண்டியது தான!”

“அதப் பத்தி யோசிக்கற நேரமா டீ இது. பேசாம படு” விட்டேத்தியாக பதில் சொல்ல,

“என் கஷ்டம் உனக்கு இப்போ புரியாது வைஷு” கரகரத்த குரலில் அனு வலியுடன் கூற,

எழுந்து அமர்ந்தாள் தங்கை.

 

“ஹே! லூசு அக்கா. இங்க பாரு. உனக்கு லாஜிக் தெரியுமா?” புதிதாக ஏதோ அவளுக்கு சொல்ல வந்தாள்.

“என்ன டீ லாஜிக் இதுல?”  அவளும் பின்னால் ஒரு தலையணையை வைத்து சாய்ந்து அமர்ந்து கேட்க,

“ம்ம். கல்யாணம் ஆகப் போற பொண்ணு. முதல்ல இதை தெரிஞ்சுக்கோ” தொண்டையைச் செருமிக் கொண்டு சொல்ல ஆரம்பித்தாள்.

“சொல்லுங்கோ கேட்டுக்கறேன்” அனு கைகூப்பினாள்.

“இந்த பசங்க பொண்ணுங்க கல்யாணம், இதுக்கு பின்னாடி ஒரு பெரிய ரகசியம் இருக்கு. அதை பத்தி நான் உனக்கு சொல்லப் போறேன்.

பசங்க பொதுவா நான் தான் பெரிய ஆளு. நீ பொம்பள, எனக்குக் கீழ தான் எப்பவுமே அப்படிங்கற எண்ணத்துல இருப்பாங்க.

ஆனா அது உண்மை இல்லை.

எப்பவுமே ஸ்ட்ராங்கானவங்க பெண்கள் தான்.

ஒரு பொண்ணுக்கும் பையனுக்கும் கல்யாணம் பண்ணா ஏன் பையன விட நாலு அஞ்சு வயசு கம்மியான பொண்ணா பாத்து கல்யாணம் பன்றாங்க தெரியுமா? பொண்ணுங்க பசங்கள விட அறிவுலயும் சரி, மனப்பக்குவத்துலையும் சரி அதிகமான திறன் உள்ளவங்க.

பசங்க பொண்ணுங்க லெவல் அடையரத்துக்கு கொஞ்சம் டைம் ஆகும். அப்போ நாலு வயசு கம்மியா இருக்கற பொண்ண அவன் கல்யாணம் பண்ணும்போது, அந்தப் பொண்ணோட அவனால சரிசமமா வாழ முடியும்.

பொண்ணுங்க எல்லா இடத்துலயும் ஈஸியா அடாப்ட் ஆகிடுவாங்க. ஒரு பசுமையான செடி மாதிரி. எங்க நட்டாலும் அவங்களால அங்க வேர் விட்டு வளர முடியும்.

ஆனா இந்த ஆண்கள் மரம் மாதிரி. ஒரு இடத்துல வளந்துட்டா, அதுக்கப்பறம் வெட்டிபோடற வரை அங்க தான்.

அவங்களுக்கு எங்கயும் நகர்ற சக்தி கிடையாது.

மனசளவுலையும் ரொம்ப திடமெல்லாம் இல்லைன்னு தான் சொல்லுவேன்.

நாலு பசங்க இருக்கற இடத்துல ஒரு பொண்ணால ப்ரெண்டா பழகிட முடியும். அதே நாலு பெண்கள் இருக்கற இடத்துல ஒரு பையானால் ப்ரெண்டா இருக்கவே முடியாது.  அவனுக்கு மனசு பலகீனம்.

ஒரு பொண்ணோட அவன் பழகும் போதே அவன் மனசு அந்த பொண்ணை சார்ந்து இருக்க ஆரம்பிச்சுடும். இல்ல அவ தனக்காக தன்னையே நினைக்கணும்னு ஏங்க ஆரம்பிப்பான். உடனே லவ் ப்ரொபோஸ் பண்ணி அவளை தன் கூட வெச்சுக்க பார்ப்பான்.

அந்தக் காலத்துல புருஷன் இன்னொரு பொண்ணோட பழக்கம் வெச்சிருக்கான்னு தெரிஞ்சா கூட பொண்ணுங்க அதை ஏத்துக்கற அளவு பக்குவமா தான் இருந்தாங்க. இதே பொண்டாட்டிக்கு வேற ஒருத்தன் கூட பழக்கம் இருக்குனு தெரிஞ்சா அந்தக் கோழைங்க தற்கொலை தான் பண்ணிக்குங்க.

இல்லனா அவளை ஊரறிய அசிங்க படுத்தி தன்னோட மனசு வலிய போக்கிப்பாங்க.

இதுலேந்து தெரியுதா அவங்க மனசு எவ்வளவு வீக்னு.

இந்தக் காலத்துல அம்மா அப்பா வேலைக்கு போனா அந்தக் குழந்தையை பாத்துக்கரத்துக்கு ஆள் வைக்கறா. வளந்த அந்த குழந்தையை பாத்துக்கறதுக்கு கல்யாணம் பண்ணி வைக்கறா.” வைஷு பாய்ண்ட் பாயிண்டாக சொல்ல, தன் மனதில் கவலை எங்கே போனதென்று தேடினாள் அனு.

“கடைசியா வளந்த அந்தக் குழந்தைக்கு ஆயா வேலை பார்க்க தான் நாம பொறந்தோமா?” சிரித்துக் கொண்டே சொல்ல,

“என்ன பண்றது, அவங்க கெபாசிட்டி அவ்ளோ தான். எப்பவுமே பொண்ணுங்க தான் அனு கெத்து. குடும்ப பாரம், கணவன் பாரம், பிள்ளைகளை சுமக்கற பாரம் எல்லாத்தையும் தாங்கற அளவு ஒரு பொண்ணுக்கு சக்தியை ஆண்டவன் குடுத்திருக்கான்.” இல்லாத காலரை தூக்கி வீட்டுக் கொண்டாள் வைஷு.

“நீ எங்கயும் போய்ட போறதில்ல நாங்களும் எங்கயும் போய்டப்போறதில்ல. இந்தக் காலத்துல போன், வீடியோ கால் இந்த வசதியெல்லாம் இருக்கு. எப்போ வேணாலும் பாத்து பேசலாம்.

பிரிய போறோம்னு நினைக்காம, நமக்கு இன்னொரு குடும்பத்தையும் பாத்துக்கற அளவு பக்குவம் வந்துடுச்சுன்னு கெத்தா நில்லு. என்னோட அக்கா இதுக்கெல்லாம் கலங்கிட கூடாது. “அவளின் கழுத்தைக் கட்டிக்க கொண்டு அவளை ஓரளவு தேற்றிவிட்டாள்.

அனுவின் முகம் தெளிந்தது.

“ரொம்ப தேங்க்ஸ் வைஷு. உன்ன நெனச்சா எனக்குப் பெருமையா இருக்கு” அவளின் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.

“சரி சரி தூங்கலாம் வா. இந்த மாதிரி முழிச்சிருந்து தேவைல்லாதத யோசிக்காம, அந்த நேரத்துல வளந்த கொழந்த என்ன பண்ணுதுனு போன் பண்ணி கேளு. போறப்ப யாருக்கும் தெரியாம சிக்னல் வேற குடுத்துட்டு போயிருக்கார்” கிண்டல் செய்யவும்

“ஏய்” அனு அவளை அடிக்க வர,

போர்வைக்குள் புகுந்து கொண்டாள் வைஷு.

error: Content is protected !!